இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணம் தீவப் பகுதி மினவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று முன்னெடுத்தனர்.
யாழ். பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணி யாழிலுள்ள இந்திய துணைத் தூதரம் வரை சென்று நிறைவடைந்தது.
இதன் போது கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களம், கடற்தொழில் அமைச்சர் , இந்திய துணைத் தூதரகம் ஆகியற்றுக்கு மகஐரொன்றையும் கையளித்தனர்.
இந்திய மீனவர்களின் அத்து மீறிய இழுவைப் படகுத் தொழிலால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன் கடற்தொழிலாளர்களும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றதாகவும் தெரிவித்த மினவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமிறல்களைக் கட்டப்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment