தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா பட விழாக்களில் கலந்துக் கொள்ளாமல் இருப்பதால் அவருக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்க திரிஷா நாயகியாக நடிக்கும் 'பரமபதம் விளையாட்டு'. இப்படத்தின் பிரி புரமோஷன் விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களும் படக்குழுவினர்களும் கலந்துக் கொண்டனர்.
இதில் தயாரிப்பாளரும் நடிகருமான டி.சிவா பேசும்போது 'நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் படம் பார்த்த என் நண்பர்கள் சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்கள். பெரிய நாயகன் இல்லாமல் விளம்பர நோக்கோடும் இல்லாமல் ஆனால் நட்சத்திர அந்தஸ்த்தோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார் திருஞானம்.
இப்படிப்பட்ட படத்தின் விளம்பரத்திற்கு திரிஷா வரவில்லையென்பது வருத்தத்திற்குரிய விஷயம். தொடர்ந்து அவர் விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன்' என்றார்.
Post a Comment