அரசியலில் நான் ஈடுபடப் போவதில்லை. முரண்பாட்டு அரசியல் செய்வதற்கும் நான் இங்கு வரவில்லை. எமது மக்களுக்கு சேவையாற்றவே வந்திருக்கிறேன். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பிஎச்எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
யாழிலுள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
வடக்கு மாகாண ஆளுநராக பல சவால்களுக்கு மத்தியில் நியமிக்கப்பட்டிருந்தேன். அதாவது ஆதரவு எதிர்ப்புக்கள் போட்டிகள் என பல இருந்தும் நான் ஆளுநராக நியமிக்கப்பட்டேன். ஆவ்வாறு நான் ஆளுநராக இங்கு வந்ததன் நோக்கமே வடக்கு மக்களுக்கு என்னாலான சேவைகளைச் செய்ய வேண்டுமென்பதற்காகத் தான்.
ஆகவே அத்தகைய சேவைகளைச் செய்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு அனைவரதும் ஒத்துழைப்பும் ஆதரவும் இருந்தால் இந்த மாகாணத்திலுள்ள மக்களின் வாழ்வை மேம்படுத்துகின்ற பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியுமென்று நம்புகின்றேன்.
ஆகையினால் இங்குள்ள ஒவ்வொருவரும் சிறந்த மனப்பாங்குடன் வேலைகளைச் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறேன். மேலும் தேவையில்லாத விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்கள் சுத்துவதை தவிரக்க வேண்டும். அவை தொடர்பில் ஆராந்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும். அத்தோடு அவ்வாறான விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்கள் என்பது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
நாம் அனைவரும் ஒரே பாதையில் பயணித்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அத்தகைய ஆரோக்கியமான சிறந்த சமுதாயத்தை உருவாக்கி அனைவரதும் வாழ்வை வளப்படுத்துகின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இத்தகைய சேவைகளைச் செய்வதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன்.
மேலும் மக்களுக்கான சேவை செய்ய வேண்டுமென்பதே எனது நோக்கமாக உள்ளது. அதனை விடுத்து பிரபலமாக வேண்டுமென்ற எந்த தேவையும் எனக்கு இல்லை. நான் அரசியலில் ஈடுபடப் போறதில்லை. முரண்பாட்டு அரசியல் செய்வதற்கும் இங்கு நான் வரவில்லை. உண்மையாகவே மக்களுக்கான சிறந்த சேவையை மேற்கொள்வதற்கே வந்திருக்கிறென். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்க வேண்டும் என்றார்.
Post a Comment