யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்டின் சிபாரிசில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் கம்பரெலிய துரித கிராம அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் 1 மில்லியன் மற்றும் கழகத்தின் 2.2 மில்லியன் நிதியில் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் குருநகர் சென். றொக் விளையாட்டுக்கழக மைதானம் விளையாட்டுக் கழகத்தின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
கழகத் தலைவர் அல்பிறட் டன்சன் (மதன்) தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மாநகர முதல்வர் மைதானததை திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் முதல்வரின் வட்டார இணைப்பாளர் அருட்தந்தை மதகுருமார்கள் யாழ்ப்பாணம் குருநகர் சென். றொக் விளையாட்டுக்கழக நிர்வாக உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment