ஆயுதங்களுடன் வீடொன்றுக்குள் நுழைந்து வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம் - தீவிர தேடுதலில் பொலிஸார் - Yarl Voice ஆயுதங்களுடன் வீடொன்றுக்குள் நுழைந்து வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம் - தீவிர தேடுதலில் பொலிஸார் - Yarl Voice

ஆயுதங்களுடன் வீடொன்றுக்குள் நுழைந்து வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம் - தீவிர தேடுதலில் பொலிஸார்

யாழ். கொடிகாமம் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொடிகாமம் மாசேரிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்றிரவு வாகனமொன்றில் சென்ற பத்திற்கும் மேற்பட்ட வாள்வெட்டுக் குழுவினர் அந்த வீட்டினுள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது வீட்டு உரிமையாளர் வெளியில் வந்த போது அவரைத் தாக்க முற்பட்டுள்ளனர். இதனையடுத்து வீட்டிற்குச் சென்ற உரிமையாளர் வீட்டின் கதவுகள் அனைத்தையும் பூட்டிவிட்டு அயலவர்கள் நண்பர்கள் மற்றும் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்த மற்றும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொருக்கி சேதப்படுத்தினர். இதன் பின்னர் அயலவர்கள் ஓடி வந்தததைத் தொடர்ந்து வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்து வாகனத்தில் தப்பியோடியுள்ளது.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post