கிழக்கில் உதயமாகிய புதிய கூட்டணி - Yarl Voice கிழக்கில் உதயமாகிய புதிய கூட்டணி - Yarl Voice

கிழக்கில் உதயமாகிய புதிய கூட்டணி

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக உதய சூரியன் சின்னத்தில் தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உதயமாகியுள்ளது.

சட்டத்தரணி சிவநாதன் தலைமையிலான கிழக்கு தமிழர் ஒன்றியம் ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி கணேசமூர்த்தி தலைமையிலான இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு முதலான நான்கு கட்சிகள் இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

இதேவேனை முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் எதிர்வரும் சில வாரங்களில் கூட்டணியுடன் இணைந்து கொள்வாரென ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post