வர்த்தமானி வெளியிட்டார் ஐனாதிபதி - நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - 25 ஆம் திகதி தேர்தல் - Yarl Voice வர்த்தமானி வெளியிட்டார் ஐனாதிபதி - நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - 25 ஆம் திகதி தேர்தல் - Yarl Voice

வர்த்தமானி வெளியிட்டார் ஐனாதிபதி - நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - 25 ஆம் திகதி தேர்தல்

நாடாளுமன்றத்தினைக் கலைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.

19ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் நான்கரை ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தினை கலைப்பதற்கு முடியும்.

அத்துடன் இந்த விடயத்தில் காணப்படுகின்ற ஒழுங்குமுறைகள் மற்றும் சம்பிரதாயங்கள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினரான தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

இந்த நிலையிலேயே நாடாளுமன்றத்தினைக் கலைக்கும் உத்தியோகபூர்வமான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்புமனு கோரல் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய 9வது நாடாளுமன்றத்தின் முதலாவது ஒன்றுகூடல் எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post