கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3039ஆக உயர்ந்துள்ளதாக சீனா சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89071ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை சுமார் 58 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவுக்கு வெளியே மிகப்பெரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள ஈரானில் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளவில் கிட்டத்தட்ட 90 000பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 3 738ஆக எட்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.
அத்தோடு தென் கொரியாவில் நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.
Post a Comment