இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 42 ஆக உயர்ந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரேனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நேற்று வரையில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக காணப்பட்ட நிலையில் டெல்லிஇ உத்தரப்பிரதேசம் ஜம்மு – காஷ்மீர் ஆகியவற்றில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கேரளாவில் 3 வயது குழந்தைக்கும் குறித்த வைரஸின் தாக்கம் இருப்பதாக மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்தியா எதிர்கொள்ளும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.