இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தேசியப் பேரிடராக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
இதேவேளை இந்தியாவில் இன்றைய நிலைவரப்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் வைத்தியசாலைகளில் தனிப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அத்துடன் இந்தியாவில் இருவர் கொரோனா தாக்கத்துக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக இன்று அறிவித்துள்ள மத்திய அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ செலவினங்கள் மற்றும் நிவாரணத் தொகையாக 4 இலட்சம் ரூபாய் வரை வழங்கவும் மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
பேரிடர்களை எதிர்கொள்ளும் செலவினங்களுக்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் இருந்து பயனாளிகளுக்கு எவ்வளவு தொகை வழங்கலாம் என்பதை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Post a Comment