யாழில் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யாமல் பதுக்கியும் நிர்ணையிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் எச்சரிகை செய்துள்ளார்.
விற்பனை நிலையங்கள் மற்றும் எரிபொருள் விற்பனை நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
பொருட்களை பதுக்கியும்இ நிர்ணையிக்கப்பட்ட விலைகளுக்கு அதிகமான விலைகளில் பொருட்களை விற்பனை செய்வதற்கு நிலர் முனைகின்றார்கள். இவர்களுடைய நடவடிக்கையால் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதற்கு நாங்கள் இடமளிக்க போவதில்லை.
அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யாமல் பதுக்குதல் மற்றும்இ நிர்ணையிக்கப்பட்ட விலைகளுக்கு அதிகமான விலைகளில் பொருட்களை விப்பனை செய்வதை வியாபாரிகள் நிறுத்த வேண்டும்.
மாவட்ட பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரசபையின் அலுவலகர்கள் மற்றும் அளவீட்டு நியமங்களின் அலுவலகர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி யாழில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
பொருட்களை பதுக்கினாலே அல்லது அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இருப்பினும் பொது மக்கள் வீண் புரளிகளை நம்பி அத்தியாவசி பொருட்களின் தட்டுப்பாட்டை செயற்கையாக ஏற்படுத்த வேண்டாம்.
மேலும் பாரிய அளவில் மக்கள் கூடுவதை தவிர்ப்பது பாதுகாப்பான நடவடிக்கையாக இருக்கும். சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இதனால்தான் பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை உணர்ந்து பொது மக்கள் செயற்பட வேண்டும்.
திடீர் சுற்றிவளைப்புக்களையும்இ காண்காணிப்பு நடவடிக்கைகளும் நேற்று முன்தினம் இரவு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் மூலம் இனங்காணப்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Post a Comment