யாழ் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் ஒன்று மிக விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடுவது என தற்போது வரை தீர்மானித்துள்ளோம்.
எனினும் வடக்கு கிழக்கு சார்பாக புதிய கூட்டணிகள் அமைக்கப்படுவதால் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியில் நாம் இணைவது சம்பந்தமாக அவர்கள் அழைப்பு விடுத்தால் பேசுவதற்கு தயாராகவே இருக்கின்றோம். நமக்கும் அவர்களுக்கும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. அதே போல கூட்டமைப்புடனும் பேசுவதற்குத் தயாராக உள்ளோம்.
ஆனால் தற்போது அதற்கான சூழல்களும் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் தொடர்பான தங்களது நிலைப்பாடுகளை எடுத்து விட்டனர். இதில் குறிப்பாக தமிழ் கட்சிகள் ஒற்றுமை தமிழ் மக்கள் ஒற்றுமை என்று கூறுபவர்கள் ஒவ்வொருவரும் உண்மையில் அந்த ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான எந்தவித செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. மாறாக இவ்வாறு ஒற்றுமையைப் பேசிக் கொண்டு தங்களதும் தங்கள் கட்சிக்கானதும் வாக்குகளைப் பெறவே முயற்சிக்கின்றனர்.
உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்துவைக்க அனைவரும் ஒற்றுமை பட வேண்டியது அவசியமானது. அந்த ஒற்றுமை என்பது மக்களுக்கானதாக அல்லாமல் தேர்தல் காலங்களில் இணையும் கூடடணியாக இருக்க கூடாது. அவ்வாறான ஒற்றுமைக்கான அல்லது கூட்டணிக்கான அழைப்பு ஏதும் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை. ஆகவே அழைத்தால் அவர்களுடன் பேச தயாராகவே இருக்கின்றேன்.
மேலும் இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையே பல விரிசல்களை ஜெனிவா ஏற்படுத்தி உள்ளது. நாம் இரண்டாம் தர பிரஜைகள் என்று என்னாது அனைவரும் சமமான பிரஜைகள் என்ற எண்ணத்துடன் வாழ வேண்டும். சர்வதேசம் தமிழ் மக்களுக்கு சார்பாக செயற்படவில்லை. மாறாக அவர்கள் தங்களின் வியாபாரத்திற்காக எமது பிரச்சினைகளை கருவியாக பார்க்கின்றார்கள்.
தமிழ் மக்களை இரையாகப் பாவித்துவிட்டு தூக்கி எறிந்து விடுவார்கள். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜெனிவா தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பரபரப்பை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் தமது இழந்த செல்வாக்கை மீள பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றனர். அது தான் தற்பொது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதென்ற யதார்த்தத்தை அனைவரும் விளங்கிக் கொள்வது அவசியம்.
உண்மையில் சர்வதேசம் தமிழ் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்டிருக்குமாயின் கடந்த ஐந்து வருடங்களில் எத்தகைய நடவடிக்கைகளையும் ஏன் எடுக்கவில்லை. அதே போல கூட்டமைப்பும் ஏன் அமைதியாக இருந்தனர். இன்றைக்கு சர்வதேச நாடுகள் தங்களுடைய சில செயற்பாடுகளை இங்கு முன்னெடுக்க முடியாதென்பதால் தற்போது nஐனிவா விவகாரத்தை கையிலெடுத்திருக்கின்றனர். அதே போல கடந்த அரசைப் பாதுகாத்து வந்த கூட்டமைப்பினரும் தற்போது புதிய அரசாங்கம் வந்திருப்பதாலும் தேர்தல் வர இருப்பதாலும் அந்த விடயத்தை பெரிதாக்கி மக்களை ஏமாற்றுகின்ற வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஐநா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30ஃ1 தீர்மானத்தினால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. எனவே அரசாங்கம் அந்த தீர்மானத்தில் இருந்து விலகுவதால் எமக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்பட போவதில்லை ஆனால் இதனை அரசு விலகுகிறது ஐநாவுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறுகிறது பூதாகரமாக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றது.
ஆகவே கூட்டமைப்பின் இந்த ஏமாற்று வெலைகளை உணர்ந்து நடைபெறவிருக்கின்ற இந்தத் தேர்தல்களிலாவது தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
Post a Comment