இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் கட்சிகள் தமது வேட்பாளர்கள் தொடர்பில் உத்தியொகபூர்வ அறிவித்து வருகின்றன.
ஆனால் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தொடர்பில் இதுவரை முழுமையான அறிவிப்புக்கள் எவையும் வெளி வரவில்லை. அதே நேரத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தமது வேட்பாளர்கள் சிலர் குறித்து மட்டும் அறிவிப்புக்களை செய்திருக்கின்றனர். ஆனால் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பிலான அறிவிப்புக்கள் இன்னமும் வெளி வரவில்லை.
இந்த நிலையிலையே நாளை மறுதினம் தமிழரசுக் கட்சி அவசரமாக கொழும்பில் கூடுகின்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் கூட்டமைப்பின் அனைத்து வேட்பாளர்கள் தொடர்பிலான அறிவிப்புக்களும் வெளிப்படுத்தப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை வடக்கு கிழக்கிற்கு வெளியே கூட்டமைப்பு இத் தேர்தலல் களமிறங்குவதா இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பில் தமிழரசுக் கட்சி இன்று அவசரமாக கூடுகிறது. இதன் போது இறுதி முடிவெடுத்து அறிவக்கப்படுமென்று தெரிய வருகிறது.
Post a Comment