தமிழ் மக்களின் கோரிக்கைகளைக் கைவிட்டு அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டதால் தான் தமிழ் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்துகின்ற மாற்றுத் தலைமை தேவைப்பட்டது. இன்றைக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமையில் அந்த மாற்றுத் தலைமை உருவாக்கப்பட்டிருக்கின்ற நிலையில் மாற்றுத் தலைமை தேவையில்லை என்று கூட்டமைப்பினர் கூறுவது வேடிக்கையானது.
இவ்வாறு தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் கூட்டமைப்பில் யார் தலைவர் என்ற அடிப்படையில் அவர்களுக்கிடையேயான குற்றஞ்சாட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் கட்டப்பிராயிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது..
மாற்றுத் தலைமைக்கான அவசியம் கடையாது என்றும் தலைவராக சம்மந்தன் அவர்களே இரக்கின்றார் என்றும் ஆகையினால் மாற்றுத் தலைமை தொடர்பில் பேச வேண்டிய அவசியம் கிடையாது என்றும் அண்மையில் மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கின்றார். அது மாத்திரமல்ல தலைமை தொடர்பில் மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
தமிழ் மக்களின் பிரச்சனைகள் தேவைகள் கோரிக்கைகள் அனைத்தையுமு; கைவிட்டு அரசாங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் கூட்டமைப்பினர் செயற்பட்டதால் தான் தமிழ் மக்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு மாற்றுத் தலைமை தேவைப்பட்டது. இன்றைக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைமையில் அந்த மாற்றுத் தலைமை உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
இந் நிலையில் சம்மந்தன்; தான் தலைமை என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் சம்மந்தனை விடுத்து வேறு ஒருவர் தான் தலைமைத்துவ பாணியில் செயற்படுகின்றார். நடைபெறவிருக்கும் தேர்தல் வேட்பாளர் தெரிவில் கூட அப்படி தான் நடைபெற்றுள்ளதாக அக்கட்சியினரே குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆக தலைமைத்துவம் என்பது சமந்மந்தனிடமோ மாவை சேனாதிராசாவிடமேர் இருக்கிறதா என்றால் இருவரிடமே இல்லை. அங்கு வேறு ஒருவரே தலைவராகச் செயற்படுகின்றார். அவரின் தவறான நடவடிக்கைகள் தான் கட்சியை அழிப்பதாக அக்கட்சியினரே குற்றஞ்சாட்டகின்றனர்.
ஆகவே தமிழ் மக்களின் அபிலாசைகள் கோரிக்கைகளை விடுத்து செயற்படுகின்ற அவ்வாறான தலைமைகள் அல்லது அவர்கள் சார்ந்த கூட்டமைப்பு மீண்டும் தமக்கு ஆதரவை தாருங்கள் என மக்களிடம் கோருவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இப்படியானவர்களால் எதிர்காலத்திலும் ஒன்றும் செய்ய முடியாது. தமது கட்சிக்குள்ளெயே இருக்கின்ற பிரச்சனைகளைத் தீர்க்கவோ சரியான கொள்கைகளையோ கொண்டிருக்காதவர்கள் இனியும் தமிழ் மக்களுக்க்காக செயற்படுவார்கள் என்று நம:புவதற்கில்லை.
ஆகவே தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை அவிசயம். ஆந்த மாற்றுத் தலைமை என்பது அரசியல் உரிமையை அபிவிருத்தியை ஐனநாயக சூழலை பாதுகாக்கக நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறான நிலையில் மாற்றுத் தலைமை அவசியம் குpறத்தான சிந்தனை ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் மாற்றம் ஏற்படுமென்று நம்புகிறோம்.
மேலும் இன்றைக்கு அந்தக் கட்சியில் இருக்கின்றவர்களே அக் கட்சியின் தலைவரை விமர்சிக்கின்ற அளவிற்கு நிலைமை சென்று கொண்டிருக்கின்றது. குறிப்பாக வெளியில் இருப்பவர்கள் அல்லது மாற்றுக் கருத்தக்களை கொண்ட அரசியல் கட்சியினர் விமர்சிசிப்பது ஒரு விடயம். அதே போல கட்சிக்குள் பிரச்சனைகள் இருந்தால் அதனைக் கட்சிக்குள்ளெ பேசித் தீர்க்கலாம்.
அதனைவிடுத்து அக் கட்சி உறுப்பினரால் நடாத்தப்படுகின்ற கூட்டங்களில் அக் கட்சித் தலைவர் விமர்சிக்கப்படுகின்ற போது அதற்கு பதில் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு பதில் சொல்லாமல் இரப்பதென்பது அந்த விமர்சனங்களை இவரும் ஏற்றுக் கொள்கிறாரா அல்லது அது சரி என்பதா என்ற கேள்விகள் எழுகிறது.
ஆனால் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசவிற்கு எதிராகவே சுமந்திரன் செயற்படுவதாக அக் கட்சியின் பெண்களே சொல்லியுள்ளனர். ஆக மாவை னோதிராசாவை முட்டாள் பட்டம் கட்டுவதற்கு இவ்வாறான கூட்டங்கள் நடைபெறுகிறதா என்ற கேள்வியும் உள்ளது. ஏனெனில் கேள்விகள் கேட்டால் அதற்கான பதில் சொன்னால் சரியாக இருக்கலாம். ஆனால் அவ்வாறான கேள்விகளுக்கு சரியான பதிலை சுமந்திரன் சொல்வதில்லை.
அப்படியானால் அந்த விமர்சனம் என்பது மாவைக்கு எதிராகவே செல்லும'
மேலும் ஒரு கட்சியினரையோ அல்லது அந்தக் கட்சியின் தலைவரையோ மாற்றுக் கட்சியினர் குற்றஞ்சாட்டலாம். ஆவ்வாறு ஒருவர் குற்றஞ்சாட்டகின்ற போது அந்தக் கட்சியின் பேச்சாளர் என்று சொல்கின்றவர் வெறுமனே பார்வையாளனாக இருந்த பார்ப்பது என்பது அவரும் அதை ஏற்றுக் கொள்கிறார் என்பதாகவே அமையும் என்றார்.
Post a Comment