அத்தியாவசியப் பொரட்களை வர்த்தகர்கள் பதுக்கவில்லை. அதே நேரத்தில் அதிக விலைக்கு விற்கவும் இல்லை. மக்களுக்கான சேவையாக இரவு பகல் பாராது வர்த்தகர்கள் செயற்படுகின்ற போது வர்த்தகர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துவது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ள யாழ் வணிகர் கழகத் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர் பொது மக்களுக்கு தேவையான பொருட்களை விநிநோயிக்கின்ற சேவையை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு வர்த்தகர்கள் தயாராகவே இருக்கின்றனர் எனத் தெரிவித்தனர்.
யுhழ் வணிகர் கழகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே வர்த்தக சங்க பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இதன் போது மேலும் தெரிவித்ததாவது..
யுhழ்ப்பாணத்தில் தேவையான பொருட்கள் உள்ளன. அதே நேரம் தேவைக்கேற்ப பொருட்கள் இறக்குமதிகளும் செய்யப்படுகின்றன. ஆகையினால் பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை. வர்த்தகர்களிடம் பொருட்கள் இருக்கும் வரையில் அல்லது இறக்குமதிகள் வரும் வரையில் தொடர்ந்தும் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
ஆனால் கொழும்பில் இறக்குமதிகள் தடை செய்யப்பட்டால் அல்லது உற்பத்திகள் நிறுத்தப்பட்டால் மாத்திரமே பொருட்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். ஆயினும் தற்போதுவரை கையிருப்பில் உள்ள பொருட்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற பொருட்களை பொது மக்களின் தேவைக்கு ஏற்ப வர்த்தகர்கள் விநியோகித்து வருகின்றனர்.
ஆகவே நாம் மிண்டும் மீண்டும் சொல்லுவது தென்னிலங்கையில் இறக்குமதிகள் அல்லது உற்பத்திப் பொருட்கள் தடை செய்யப்பட்டால் தான் அதில் பிரச்சனைகள் வரும். ஆகவே தற்பொது வரை அதற்கான தடைகள் ஏதும் இல்லாததால் தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கின்ற பொருட்களை வைத்து போதுமான அளவு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
ஆகவே பொருட்களை வர்த்தகர்கள் பதுக்கவில்லை. அதே போன்று அதிக விலைக்கும் விற்கவில்லை. எனவே பதுக்குவதாகவே அல்லது அதிக விலைக்கு விற்கப்படுவதாகவோ வெளிவருகின்ற தகவல்களில் உண்மையில்லை. மக்களுக்கான உன்னத சேவைகளை வர்த்தகர்கள் கடந்த போர்க் காலத்திலும் வர்த்தகர்கள் ஆற்றி வந்திருக்கின்றனர். அதே போன்றெ தொடர்ந்தும் பொது மக்களுக்கான சேவைகளை வர்த்தகர்கள் வழங்குவார்கள்.
ஆண்மைய சில நாட்களாக கொரோனா அச்சத்தால் பெருமளிவில் பொது மக்கள் வர்த்தக நிலையங்களுக்குச் சென்று அதிகளவிலான பொருட்களைக் கொள்வனவு செய்திருக்கின்றனர். அதிலும் இரவு பகல் என மக்கள் தமக்கான பொருட்களை வர்த்தக நிலையங்களில் இருந்து பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர்.
ஆகவே இரவு பகல் பாராது மக்களுக்கான சேவையாக வர்த்தகர்கள் செயற்பட்டிருக்கின்றனர். அவ்வாறு வர்த்தகர்கள் செயற்படுகின்ற போது பொருட்களை பதுக்குவதாகவோ அல்லது அதிக விலைக்கு விற்பதாகவோ சொல்லுவது மிகவும் மனவருத்தத்தை தருகின்றது.
அவ்வாறான அரச அதிபர் தான் கூறியிதாக வந்த செய்திகளிலும் உண்மையில்லை. பொது மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டு வர்த்தகர்கள் செயற்பட்டு வருகின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
எனவே நாம் மீண்டும் மீண்டும் மக்களிடம் கேட்டுக் கொள்வது என்னவெனில் உங்களுக்கு தேவையான பொருட்களை நிங்கள் தாராளமாகக் கொள்வனவு செய்யலாம். ஆனால் பழுதடையக் கூடிய பொருட்களை கொள்வனவு செய்யாதீர்கள். ஏனெனில் உங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் போதுமான அளவு எங்களிடம் உள்ளது.
ஆகையினால் நிங்கள் அச்சப்படவோ பதற்றப்படவோ அவசரப்படவோ தேவையில்லை. நாம் உங்களுக்கான சேவையை சிறந்த முறையில் தொடர்ந்தும் செய்வோம் என்றனர்.
Post a Comment