எதிர் மனுதாரரின் சமர்ப்பணத்துக்காக ஒத்திவைக்கப்பட்ட மணிவண்ணணிண் வழக்கு - Yarl Voice எதிர் மனுதாரரின் சமர்ப்பணத்துக்காக ஒத்திவைக்கப்பட்ட மணிவண்ணணிண் வழக்கு - Yarl Voice

எதிர் மனுதாரரின் சமர்ப்பணத்துக்காக ஒத்திவைக்கப்பட்ட மணிவண்ணணிண் வழக்கு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க கட்டளையிடுமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு எதிர் மனுதாரரின் சமர்ப்பணத்துக்காக வரும் மார்ச் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன் இந்த மனு இன்று மீள் விசாரணைகை்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

எதிர் மனுதாரரான யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் வி.மணிவண்ணனின் தரப்பில் சட்டத்தரணிகள் காண்டீபன் ஜூட் டினேஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் மூத்த சட்டத்தரணி வியித் சிங் முன்னிலையானார். மனுதாரரின் சமர்ப்பணத்தையடுத்து எதிர்மனுதாரரின் சமர்ப்பணத்துக்காக மனு எதிர்வரும் 11ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.



0/Post a Comment/Comments

Previous Post Next Post