உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் 30 மாகாணங்களில் பரவியுள்ள நிலையில் நியூயோர்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நியூயோர்க் மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89ஆக அதிகரித்திருப்பதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுனர் ஆண்ட்ரூ கூமோ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கலிபோர்னியாஇ ஹவாய் ஆகிய மாகாணங்களில் ஏற்கனவே அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது நியூயோர்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 500இற்க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 22பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment