பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவருமான சஜித் பிரேமதாச நேற்று சென்று சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. பொதுத் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து இந்த சந்திப்பில் விரிவாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
யானைச் சின்னம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் இருவரும் புரிந்துணர்வுக்கு வந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment