யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லைக் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் ஆலய வளைவு அமைக்க யாழ்ப்பாணம் மாநகர சபை ஏக மனதாக அனுமதி வழங்கியது.
நல்லூர்க. கந்தன் ஆலயத்தின் கிழக்கெத் திசையில் பருத்தித்துறை வீதியிலும் மேற்குத் திசையில் பருத்தித்துறை வீதி மற்றும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பனிமனை சந்துக்கும் இடத்திற்கும் அண்மையில் அமைக்கப்படும் அதேநேரம் வடக்கு இ தெற்கு திசைகளிலும் இரு திசைகளிலுமா நான்கு வளைவுகள் அமைப்பதற்கான அனுமதி கோரி மாநகர சபைக்கு கிடைத்த விண்ணப்பம் தொடர்பில் சபையுல் பிரஸ்தாபிக்கப்பட்டது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லைக் கந்தன் ஆலயத்தின் புனிதத்தினையும் மரபையும் பேணிப் பாதுகாக்கும் வகையில் அமைக்க எண்ணும் குறித்த வளைவிற்கு எந்தவுதமான நிபந்தனைநும. இன்றி அனுமதிக்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் கருத்துரைத்த உறுப்பினர்கள் குறித்த வளைவு அமைக்க அனுமதிக்க முடியும் அதேநேரம் முடிந்தளவு அகலமாகவும் போதிய உயரத்துடனும் அமைக்கப்பட வேண்டும் என்பதே கோரிக்கையாக தெரிவித்து அதனை அனுமதிப்பதாக சபை ஏகமனதாக முடிவெட்டியது
Post a Comment