முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணத்திற்கும் கட்சிக்கும் தற்போது எந்தவிதயான தொர்பும் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உப தலைவருமான இரா.துரைரட்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கவுள்ளதாக நேற்றையதினம் அறிவித்திருந்தார்.
இரா.துரைரட்ணத்தில் முடிவு குறித்து இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சுரேஸ் பிரமச்சந்திரனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment