பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த கவின் நடிக்கும் புதிய படத்தில் பிகில் பட நடிகை ஜோடியாக நடித்துள்ளார்.
பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் கவின் தற்போது 'லிப்ட்' புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். ஈகா என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி இப்படத்தை தயாரிக்கிறார். விளம்பரப் படங்கள் மூலம் பெரிதும் கவனம் பெற்ற வினித் வரபிரசாத் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர்கள் இணையும் இப்படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.
எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மைக்கேல் பிரிட்டோ இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்பு முழுதும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
Post a Comment