புதிய அரசின் ஆட்சியில் ஐனநாயக நிலைமைகள் குறைவடைந்து சிவில் நிர்வாகத்தில் இரர்னுவத் தலையீடு அதிகரித்து வருவதாக பிரான்ஸ் நாட்டின் தூதுவரிடம் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் நிதியுதவியில் யாழ் மாநகரில் அமைக்கப்பட்டு வருகின்ற கலாசார மண்டபத்தை மத்திய அரசிற்கு வழங்க முடியாது. அவ்வாறு மத்திய அமைச்சிற்கு வழங்க வேண்டுமென்று கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.
யுhழ் மாநகர சபையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..
யுhழ்ப்பாணத்திற்கு வந்திருக்கும் புரானஸ் நாட்டின் தூதுவர் எம்மைச் சந்தித்து பல்வெறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தார். குறிப்பாக பிரான்ஸ் நாட்டின் நிதி உதவியில் மாநகரத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
அத்தோடு எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்திகள் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார். இதில் கடந்த ஆட்சியில் தீர்மானிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை புதிய அரசாங்கம் மேற்கொள்கின்ற போது எங்களைப் புறந்தள்ளியே அதனைச் செய்கின்ற நிலைமையை விளக்கியிருந்தேன்.
குறிப்பாக ஐ ரோட் திட்டமொன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அது தொடர்பில் எமக்கு எந்தவித அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன்.
மேலும் கடந்த ஆட்சியில் இருந்த ஐனாநாயக நிலைமைகள் தற்போது இல்லை என்றும் சுட்டிக்காட்டினேன். குறிப்பாக புதிய அரசின் செயற்பாடகளிலும் அவர்கள் வெளியிட்டு வருகின்ற கருத்துக்களிலும் அந்த ஐனநாய நிலைமை இல்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஆத்தோடு சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இரானுவத்தின் பிரசன்னம் தொடர்பிலும் எடுத்தக் கூறியிருந்தேன்.
இதே வேளை இந்திய அரசின் நிதியுதவியில் யாழ் மாநகர சபையின் காணியில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதையும் தெரியப்படுத்தியிருந்தேன். அதே நேரத்தில் மாநாகரத்தில் அமைக்கப்படும் கலாசார நிலையத்தை மத்திய அரசிற்கு வழங்குமாறு கோருவதை ஏற்க முடியாதென்பதையும் அவ்வாறு வழங்க முடியாதென்பதையும் விளக்கியிருந்தேன்.
துமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குவதலிருந்து அரசாங்கம் விலகிவிட முடியாது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தீர:வு குறித்து அரசாங்கம் பேச வேண்டும்.
அதனூடாக தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க வேண்டுமென்பதையும் குறப்பிட்டிருந்தேன். ஆகவே நடைபெறவிருக்கின்ற தேர்தல்களில் தமிழ் மக்கள் மீண்டும் கூட்டமைப்பிற்கே தமது ஆணையை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறென் என்றார்.
Post a Comment