வடக'கு முன்னாள் ஆளுநநர் சுரேனுக்கு எவ்வாறு ஆசனம் வழங்க முடியும் - சிவஞானம் கேள்வி - Yarl Voice வடக'கு முன்னாள் ஆளுநநர் சுரேனுக்கு எவ்வாறு ஆசனம் வழங்க முடியும் - சிவஞானம் கேள்வி - Yarl Voice

வடக'கு முன்னாள் ஆளுநநர் சுரேனுக்கு எவ்வாறு ஆசனம் வழங்க முடியும் - சிவஞானம் கேள்வி

மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழர்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபைக்கு சாட்சியம் கூற சென்ற சுரேன் ராகவனுக்கு நாம் எவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஆசனத்தை வழங்குவது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் கேள்வி எழுப்பியுள்ளார்

 அண்மைய நாட்களில் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட உள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சுரேன் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக இருந்த போது பெரிதாக எதையும் சாதிக்கவில்லை.

 அந்த காலப்பகுதியில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை அமர்வுக்கு மைத்திரிபால சிறிசேனவின் குழுவில் இவரும் சென்று அங்கே தமிழர்களுக்கு எதிராக சாட்சியம் சொல்வதற்கு சென்றிருந்த அப்படியான ஒருவர் ஏன் இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தனக்கு ஆசனம் வழங்குமாறு கோரிக்கை விடுகின்றனர் என்பது எனக்கு புரியவில்லை.

 நாம் எவ்வாறு தான் அவருக்கு அதை வழங்க முடியும் என கேள்வி எழுப்பினர் எனவே இந்த விடயம் தொடர்பில் பரிசீலிக்க முடியாது அவருக்கு ஆசனம் வழங்க தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்த சிவிகே அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி பேசுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு அதனை யாரும் யாருக்கும் அருகதை இல்லை என்று கூற முடியாது.

ஆனால் தவறான போலிப் பிரச்சாரங்கள் செய்ய முடியாதே தவிர அனைவருக்கும் அவர்கள் தொடர்பில் கதைக்க முடியும் எனவே அது தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவோர் அவதானமாகதமது கருத்துக்களை ஏற்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்
யுவவயஉhஅநவெள யசநய

0/Post a Comment/Comments

Previous Post Next Post