டெல்லி வன்முறை பிரதமர் நரேந்திர மோடி அரசால் நடத்தப்பட்ட இனப்படுகொலை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதல் வன்முறையாக உருவெடுத்ததில் 46 பேர் வரையில் உயிரிழந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி மேற்படி விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர் 'டெல்லியில் நடந்த வகுப்புவாத வன்முறை மோடி அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை என்றும் குஜராத் கலவரத்தைப் போன்று நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன் டெல்லி வன்முறையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது குறித்து தான் மிகவும் வேதனையடைவதாக தெரிவித்த அவர் இதனை இனப்படுகொலையாகவே தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இவ்வளவு பேர் உயிரிழந்ததற்கு குடியுரிமைத் திருத்தச் சட்டம் தான் காரணம் என்பதை அமைச்சர் அமித்ஷா நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் டெல்லி கலவரத்திற்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்' எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment