பாராளுமன்ற பொது தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இவ் பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் மெற்கொள்ளப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற பொது தேர்தலில் போட்டியிடும் கட்சிகள்இ சுயேட்சை குழுக்கள் நேற்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதிவரைக்கும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்க்கு காலம தேர்தல்கள் ஆணைக்குழு வால் அறிவிக்கப்பட்டது.
இதன்படி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்ப்பாடுகள் யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் வேட்பு மனு தாக்கலின் போது குளப்பங்கள் ஏற்பட்டமல் இருப்பதை தடுப்பதற்காக் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக யாழ் மாவட்ட செயலகத்தை சூழ பொலிஸார் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்ட செயலக சுற்று வீதிகளின் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்க்கும்இ வாகனங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்படாமல் கண்காணிப்பதற்க்கும் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடைய பாருகாப்பும் வளங்கப்பட்டுள்ளது.
Post a Comment