யாழ்ப்பாாணம் சித்தங்கேணியை சேர்ந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்.சென்.போஸ்கோ கல்லூரியிலும் அதனை தொடர்ந்து வவுனியா மகாவித்தியாலத்தில் தரம் 04 வரை கற்றிருந்தார்.
இதன்பின்னர் தரம் 05ல் இருந்து கொழும்பு விவேகாந்தா கல்லூரியில் கற்ற இவர் அங்கு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்தார்.
பின்னர் தரம் 07 இல் இருந்து உயர்தரம் வரை வட்டுக் கோட்டை இந்துக் கல்லூரியில் கல்விகற்றார்.
உயர்தரத்தில் சித்தி பெற்ற இவர் இலங்கை சப்பிரகமுவ பல்கலைக் கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்தில் சிறப்பு பட்டதாரியாவார்.
தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்தின் (ஊஆநுஏ) மாகாண இணைப்பாளராகவும் பவ்ரல் அமைப்பின் உதவி ஒருங்கினைப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.
அதனை தொடர்ந்து வடமாகாண ஆசிரிய நியமனத்தில் ஆசிரியராக நியமனம் பெற்று மல்லாகம் குளமங்கால் ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் போதே இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவாகியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் உதவி தேர்தல் ஆணையாளராக நியமனம் பெற்றுள்ளார்
Post a Comment