பகிரங்க விவாதத்திற்கு வரத் தயாரா? சுமந்திரனுக்கு காண்டீபன் சவால் - Yarl Voice பகிரங்க விவாதத்திற்கு வரத் தயாரா? சுமந்திரனுக்கு காண்டீபன் சவால் - Yarl Voice

பகிரங்க விவாதத்திற்கு வரத் தயாரா? சுமந்திரனுக்கு காண்டீபன் சவால்

உண்மைகளை மறைத்து பொய்களையே சொல்லி வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க விவாதத்திற்கு வர தயாரா என  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி நடராஐர் காண்டிபன் சவால் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே காண்டிபன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

தேர்தல் வரவிருக்கின்ற நேரத்தில் கூட்டங்களையும் மாநாடுகளையும் கலந்துரையாடல்களையும் கூட்டமைப்பினர் நடாத்தி வருகின்றனர். இதில் யாழ் வீரசிங்கம் மண்டபம் மற்றும் வடமராட்சியில் நடைபெற்ற கூட்டங்களில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எங்களது கட்சி தொடர்பில் உண்மைக்குப் புறம்பான கருத்தக்களை வெளியிட்டிருக்கின்றார்.

ஊண்மையில் அவர் எப்பொதுமே பொய்களையே சொல்லி வருபவர் தான். அவ்வாறு அவர் திரும்ப திரும்ப பொய்களைச் சொல்லி வருவதால் அது உண்மையாகாது. அந்தப் பொய்களில் எங்களைப் பற்றி சொல்லியிருப்பதால் அதனை மறுக்கின்ற அதே நேரத்தில் அதன் உண்மைகளையும் நாம் சொல்லி வைக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வெளியேறியது தொடர்பில் சுமந்திரன் கருத்த வெளியிட்டிருக்கின்றார். அதில் ஒரு ஆசனத்திற்காகவே காங்கிரஸ் வெளியெறியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் உண்மை அதுவல்ல. கொள்கைகளை கூட்டமைப்பு கைவிட்டு அதற்கு மாறான நிலைப்பாட்டை எடுத்ததாலேயே கூட்டமைப்பில் இருந்த காங்கிரஸ் வெளியேறியிரந்தது.

ஆதன் பின்னர் காங்கிரஸ் கட்சியை மீண்டும் கூட்டமைப்பில் இணைக்க வேண்டுமென்ற பேச்சும் நடைபெற்றது. அந்தப பேச்சில் நானும் பங்கெடுத்திருந்தேன். அந்த நேரத்தில் சுமந்திரன் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. ஆகவே காங்கிரஸ் ஏன் வெளியேறியது என்பது அவருக்குத் தெரிந்திருக்காது. அவ்வாறு தெரியாத ஒன்றை தெரிந்தது போல பொய்யான கதைகளையே அவர் சொல்லி வருகின்றார்.

அதே போல சர்வதேச விசாரணை முடிவடைந்து விட்டதாகவும் குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு போக முடியாது என்றும் பொய்களை சொல்லி வருகின்றார். அவர் ஒரு சட்டத்தரணியாக சர்வதேச சட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஆகவே ஒரு அறிக்கையை வைத்து விசாரணை முடிவடைந்தவிட்டதாக கூற முடியாது. அதே போல குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியாது என்றும் கூற முடியாது.

ஆகவே சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். அதே போல குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்ட செல்லப்பட வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகளை தான் செய்ய வேண்டும். இதனை விடுத்து நடக்காத ஒன்றை நடந்ததாக கூறுவதோ அல்லது செய்யக் கூடிய ஒன்றை செய்ய முடியாது எனக் கூறுவதையோ ஏற்க முடியாது.

இவ்வாறான நிலைமைகளில் தான் தொடர்ந்தும் தொடர்ந்தும் சுமந்திரன் பொய்களையே சொல்லி வருகின்றார். மக்களை ஏமாற்றுகின்ற வகையில் கூறப்படுகின்ற இந்தப் பொய்களை சரியாக மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆகையினால் இவ்வாறு பொய் கூறி வருகின்ற சுமந்திரன் இவை தொடர்பில் பகிரங்க விவாதமொன்றிற்கு வர வேண்டும். அதனூடாக அனைவரும் உண்மைகளை அறிந்து கொள்ள முடியுமென்றார்.
;

0/Post a Comment/Comments

Previous Post Next Post