Northern
Fitness ladies நிறுவனத்தின் Women
Welfare Association
( வடக்கு உடற்தகுதி பெண்கள் நிறுவனத்தின் பெண்கள் நலச் சங்கம் அங்குரார்ப்பணமும் செயலமர்வும் யாழில் இடம்பெற்றது.
ரோர்தேன் பிற்னேஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு நொர்தேன் பிற்னேஸ் பெண்கள் நிறுவனங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ் மாவட்டச் செயலகத்திற்கு அருகிலுள்ள வை.எம்.சி மண்டபத்தில் நடைபெற்றது.
நோர்தேன் பிற்னேஸ் ஸ்தாபகர் தலைமையி;ல் நடைபெற்ற இந் நிகழ்வில் வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஐh செல்வரத்தினம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு அமைப்பை ஆரம்பித்து வைத்து அதன் உறுப்பினர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.
இந் நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி, யாழ் வேம்படி மகளீர் உயர்தரப்பாடசாலை பிரதி அதிபர் லலி மகேஸ்வரன், வடக்கு மாகாண கல்விப் பிரதிப் பணிப்பாளர் என்.கந்ததாசன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கலை நிகழ:வுகளும் இடம்பெற்று பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment