பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள சரோஜா சிறிசேன நேற்று தனது நியமனக் கடிதத்தை மகாராணி எலிசபெத்திடம் கையளித்தார்.
பக்கிங்கம் மாளிகைக்கு இராஜ மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்ட இலங்கைத் தூதுவர் சரோஜா சிறிசேன மகாராணியுடன் கலந்துரையாடலையும் நடத்தியிருந்தார்.
1998ஆம் ஆண்டிலிருந்து வெளிவிவகார பணியாளராக இலங்கை அரசாங்கத்தின் பல்வேறு கடமைகளையும் வகித்துவந்த அவர்இ இறுதியாக ஆஸ்திரியாவுக்கான இலங்கைத் தூதுவராக சேவையாற்றியிருந்தார்.
ஜெனீவா இந்தியா பாரிஸ் போன்ற நாடுகளிலும் இலங்கையைப் பிரநிதிதித்துவம் செய்து பல பதவிகளையும் அவர் வகித்து வந்தார்.
Post a Comment