கட்சித் தலைமை முடிவெடுத்தால் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவேன் - முதல்வர் ஆர்னோல்ட் - Yarl Voice கட்சித் தலைமை முடிவெடுத்தால் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவேன் - முதல்வர் ஆர்னோல்ட் - Yarl Voice

கட்சித் தலைமை முடிவெடுத்தால் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவேன் - முதல்வர் ஆர்னோல்ட்


நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு எங்களது கட்சி எனக்கு அழைப்பு விடுத்தால் அத் தேர்தலில் போட்டியிட நான் தயாராகவே இருக்கிறேன் என யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டைச் சந்தித்து எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

இச் சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட யாழ் மாநகர முதல்வரிடம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்குகின்றீர்களா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

ஒரு கட்சியினுடைய கட்டளையை கடைப்பிடிப்பது தொண்டனுடைய கடமை. ஆகவே தேர்தலில் களமிறங்குமாறு கட்சித் தலைமைப்பீடம் ஒரு முடிவை எடுத்து அறிவித்தால் அதனை ஏற்றுக் கொண்டு களமிறங்கத் தயாராகவே இருக்கிறேன் என்றார்.

இதே வேளை வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த இமானுவேல் ஆர்னோல்ட் தனது பதவியை இராஐpனாமா செய்துவிட்டு கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் யாழ் மாநகர முதல்வராக களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
........................................................

0/Post a Comment/Comments

Previous Post Next Post