சித்தன்கேணியில் உழவு இயந்திரம் மோதி வயோபதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வட்டுக்கோட்டை - தெல்லிப்பளை வீதியில் சித்தன்கேணிச் சந்தியில் இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றது.
பண்டத்தரிப்பு வல்லசுட்டியைச் சேர்ந்த கிருஸ்னன் இராஜதுரை (வயது-65) என்ற முதியவரே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உணவகத்தில் சாப்பாடு எடுத்துக் கொண்டு துவிச்சக்கர வண்டியை ஓட முற்பட்ட முதியவரை எதிரே வந்த உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து மோதியது. முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உழவு இயந்திரம் சம்பவ இடத்திலிருந்த கடை ஒன்றுக்குள் புகுந்தது. மற்றொரு பெண் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்'என்று பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் உழவு இயந்திரச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment