மயிலிட்டி தெற்கு ஞானோதயா வித்தியாலயத்தின் புதிய பாடசாலை கட்டடம் திறப்பு விழா எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
பாடசாலை அதிபர் திரு.தி.ஸ்ரீதரன் அவர்கள் தலைமையில் ஆரம்பமாகவும் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்துகொள்ளும் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களால் வைபவ ரீதியாக பாடசாலைக் கட்டடம் திறந்து வைக்கப்படவுள்ளது.
இப்பாடசாலை கடந்த அரசின் ஆட்சியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து ஏப்ரல் 13 .2018 இல் விடுவிக்கபட்டதுடன் மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன் பாடசாலை புதிய கட்டட தொகுதி அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published byNitharsan
-
0
Post a Comment