அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 31 ஆவது நினைவு தினம் இன்று யாழ் பண்ணாகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
இலங்கையின்முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவருமாகிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 31 ஆவது நினைவு தினம் இன்று இடம்பெற்றது
யாழ்ப்பாணம் பண்ணாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு அருகில் இடம்பெற்றது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றி உருவச்சலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு பின்னர் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் என்.நடனேந்திரன் எம்.கே சிவாஜிலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர் இந் நினைவு தினத்தினை பண்ணாகம் மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தனர்.
Post a Comment