வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கூடடுறவுச் சங்கத்திற்கு உட்பட்ட கடற்றொழிலாளர்கள் கடலட்டை டைனமெற் சுருக்குவலை உழவு இயந்திரம் பாவனை ஆகியவற்றை நிறுத்துமாறு கோரி இன்றிலிருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழை காலை 6:30 மணி வரை மீனவர்கள் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.
அண்மைக் காலமாக கடற்றொழில் நீரியல் நலத்துறை அமைச்சினால் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் சட்ட விரோத தொழில்களான சுருக்கு வலை டைனமெற் ஒளிபாய்ச்சி மீன்பிடித்தல் ஆகியவற்றுடன் தமது பகுதியில் தங்கியிருந்து பிரதேச மீனவர்குக்கு பாதிப்பு ஏற்படித்தும் வகையிலும் மீன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் வகையில் கடலட்டை பிடித்தல் போன்ற பல்வேறு சட்ட விரோத தொழில்களில் பிற மாவட்ட மீனவர்கள் ஈடுபடுவது நிறுத்தக் கோரியே இன்றிலிருந்து இப் போராட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இடம் பெறவுள்ளதாக இன்று வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் அதன் கீழுள்ள சங்கங்கள் தீர்மானித்திள்ளன.
இவ்வறிவித்தலை இன்றைய தினம் வடமராட்சி வடக்கு கடற்தொழிலாலர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தலைவர் வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்ததாவது...
கடற்றொழில் நீரியல வளத்துறை திணைக்களம் அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்காமையே இவ்வாறு சட்ட விரோத தொழில்களும்இ கடலட்டை மற்றும் சுருக்கு வலை தொழில்களும் இடம் பெறுவதற்கு காரணம் எனவும் 1996 ம் ஆண்டு உருவாக்ப்பட்ட கடல் வள சட்டம் சடங்குக்கு பொருந்தாது என்றும் சட்டம் மக்களுக்காக இருக்க வேண்டும் என்றும் மக்கள் சட்டத்திற்காக வாழ முடியாது என்றும் இச் சட்டம் தென்னிலங்கைக்கே பொருத்தம் என்றும் எமது வளத்தை சுரண்டி எம்மை அழிக்க வேண்டாம் என்றும்
தென்னிலங்கை கடலில் மீனினம் அழிந்துள்ள நிலையில் தற்போது முல்லைத்தீவு பகுதிகளிலேயே பல நாள் கலங்கள் தொழிலில் ஈடுபடுவதாகவும் இதனால் வளங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்படுவதாகவும் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் தடை கடமையை மேற்கொள்ளது இருப்பதாகவும்
கடலட்டை தொழில் 7 மஅ தொலைவிலேயே தொழிலில் ஈடிபடுவதாகவும் தற்போது இவ்வாறான தொழில்கள் இடம் பெறுவதால்
தமது மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இதனாலேயே ஒன்றிலிருந்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் எதிர்வரும
வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு வராவிடில் தாம் தொடர்ந்தும் போராடவுள்ளதாகவும்
இது தொடர்பில் நீரியல் வளத்துறை அமைச்சரிடம் கதைத்தபோது கடலட்டை தொழிலில் ஈடுபட பிரதேச மக்கள் தான் அனுமதி வளங்குவதாகவும் இதனாலயேயே தான் அனுமதி வளங்கியதாகவும் உழவு இயந்திரம் மூலம் தொழிலில் யாராவது தொழிலில் ஈடுபட்டால் உழவு இயந்திரததை உடைக்குமாறும் தெரிவித்ததாகவும்
கடந்த 2018 ம் ஆண்டு பொது நல வழக்கு ஒன்று போடப்பட்டதாகவும் அதனடிப்படையில் பிற பிரதேச மீனவர்களை வெளியேறுமாறு மன்று உத்தரவிட்ட நிலையிலேயே இவ்வாறு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதுடன் தமக்கு அனைத்த மீனவர் சங்கங்களும் ஆதரவு தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்
Post a Comment