தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு எதிராக தேர்தல் பரப்புரையின் இறுதி நாளன்று மிக மோசமான பொய்களை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்..
பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார பணிகள் தற்போது முழு அளவில் இடம்பெற்று வருகின்றன.நடைபெறவுள்ள தேர்தலில் எமக்கான வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான இரண்டாம் திகதியன்று எம்மீது அபாண்டமான பொய்களை சுமத்தி எம்மை பற்றி மோசமாக விமர்சித்து ஊடகங்கள் வாயிலான சில சதி வேலைகள் இடம்பெறவுள்ளதாக எமக்கு நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுவரை காலமும் அரசுடன் இணைந்து அவர்களின் முகவர்களாக செயற்பட்டவர்களும் எமக்கு போட்டியாக உள்ளவர்களும் இணைந்தே இந்த சதி வேளையில் ஈடுபட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.
கடந்த தேர்தலிலும் எம்மீதும் இவ்வாறான பொய்யான கருத்துக்கள் ஊடகங்கள் ஊடாக பரப்பட்டப்பட்து.அவ்வாறு பரப்பப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொய் என நிருபித்தும் இருக்கின்றோம். எனவே மக்கள் முன்னெச்சரிகையாக இருக்க வேண்டும் என்றார்.
Post a Comment