ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஐpத் பிரேமதாசாவிற்கு கடந்த ஐனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்கள் அமோக ஆதரவை வழங்கியிருந்தார். அதே போன்ற ஆதரவை இந்தத் தேர்தலிலும் அவர் தலைமையிலான கட்சிக்கு வழங்க வேண்டுமென் அக் கட்சியில்; யாழ் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஸ்ரான்லி கோரியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்திருந்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..
இந்த நாட்டில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் ஆகியும் எமது மக்கள் பல்வேறு கஸ்ர துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இங்கு பல விதமான பிரச்சனைகளுக்கு மத்தியில் பல தேவைகளுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றார்.
இவ்வாறு மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் தேவைகளுக்கு ஒரு தீர்வை ஏற்படுத்தி அவர்களது வாழ்வை வளப்படுத்த வேண்டுமென்ற சிந்தனையின் அடிப்படையிலையே இத் தேர்தலில் நாங்கள் களமிறங்கியிருக்கின்றோம்.
அதாவது யாழ் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள எமது மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் சேவையாற்ற வேண்டமென்பதே எமது ஒரே நோக்கமாக இருக்கிறது. எமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு சஐpத் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியே சிறந்த தெரிவாக இருக்கின்றது.
அக் கட்சியின் தலைவர் சஐpத் பிரேமதாசா அவர்கள் இன மத வாதியல்ல. பெரும்பான்மை சிறுபான்மை என்ற பேச்சிற்கெ அவரிடம் இடமிருக்கவில்லை. அனைவரும் ஒரே நாட்டவர்கள் சமமானவர்கள் என்றதே அவரது நிலைப்பாடாக இருக்கின்றது. ஆகையினால் அவரை நாங்கள் நம:புகின்றோம்.
ஆவ்வாறான நம்பிக்கையுடன் தான் கடந்த ஐனாதிபதித் தேர்தலில் எமது மக்கள் அவருக்கு ஆதரவை வழங்கியிருந்தனர். ஆனால் துரதிஸ்ரவசமாக அவர் அத் தேர்தலில் தோல்வியடைந்திருந்தார். இவ்வாறான நிலைமையிலையே அவரை பிரதமராக்குவதற்கு தற்போது இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தை வடக்கு மக்களும் நழுவ விடக் கூடாது. கடந்த பல வருடங்களாக தமிழ் மக்கள் நம்பி வாக்களித்த கட்சிகள் பலவும் இன்றைக்கு மக்களை ஏமாற்றியிருக்கின்றார்கள். எனவே இனியும் ஏமாறாது நீங்கள் நம்பிக்கையுடன் கடந்த தேர்தலில் வாக்களித்த சஐpத் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவை வழங்குங்கள் என்றார்.
Post a Comment