நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் எனைத் தெரிவு செய்யாவிட்டால் தேசியப் பட்டியலினூடாக பாராளுமன்றம் செல்ல மாட்டேன். மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு அரசியிலில் இரந்து ஒதுங்கிக் கொள்ளுவேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ,சுமந்திரன் அறிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் தொடர்பில் ஊடகமொன்றுக்கு வெளியிட்டுள்ள கருத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
இங்குள்ள பலரும் எங்கள் கட்சி மீதும் என் மீதும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அவை அனைத்தும் அரசியலுக்காகவே முன்வைக்கின்றனர். அவர்களது குற்றச்சாட்டக்கள் விமர்சனங்களில் எந்தவித உண்மையுமில்லை. அதிலும் கூட்டமைப்பின் மீது விமர்சனம் முன்வைக்கின்ற போது என் மீதும் விமர்சனம் முன்வைக்கின்றனர்.
ஆனால் கூட்டமைப்பின் முக்கியமான செயற்பாடு எல்லாவற்றிலும் நான் முக்கிய பங்கு வகித்திருக்கிறேன். இது எல்லோருக்கும் தெரிந்த விசயம். அரசியல் தீர:வு விடயத்தில் சம்மந்தன் ஐயாவோடு அதனை முன்னகர்த்தியது நான். அதற்கு அப்பால் அரிசியலமைப்பு பேரவை செயலகத்தை பொறுப்பாக நிர்வகித்தது நானும் கலாநிதி nஐயம்பதி விக்கிரமரட்னவும்.
ஆகவே அந்தச் செயற்பாடுகளில் முன்னணியில் நின்று செயற்பட்டது நான் என்பது எல்லாருக்கும் தெரிந்த விசயம். ஆகையினால் எங்களுடைய கட்சியின் அடிப்படையான் நோக்கமும் அரசியல் திர்வைப் பெற வேண்டும் என்பது தான். ஆக கட்சியை நோக்கி குற்றச்சபட்டை முன்வைக்கிற பொழுது என்னைத் தவிரத்து செய்ய முடியாது. ஆகவே என்னைத் தான் தாக்க வேண்டும்.
மற்றவிடயங்கள் சம்மந்தமாகவும் கூட குறிப்பாக வெளிநாட்டு தொடர்புகள் தென்னிலங்கையில் இருக்கிற மற்றக் கட்சிகளோட தொடர்புகள் ஆகிய விடயங்களிலும் நான் கூடுதலான பங்களிப்பை செய்திருக்கிறேன். ஆகையினால் கட்சியினுடைய செயற்பாட்டை விமர்சிப்பதாக இருந்தால் கட்டாயமாக என்னுடைய செயற்பாட்டை தான் விமர்சிக்க வேண்டி வரும்.
இவ்வாறு விமர்சிப்பவர்கள் என்னைத் தோற்கடிக்க வேண்டுமென்று பிரச்சாரம் செய்கின்றனர். இதே போன்று தான் கடந்த தேர்தலிலும் இருந்தது. அந்தப் பிரச்சாரம் தான் என்னை கடந்த தேர்தலிலும் வெல்ல வைத்தது. இந்தத் தேர்தலிலும் அதே போன்ற பிரச்சாரம் தான் என்னைக் கூடுதாலக வெல்ல வைக்கும்.
இவ்வாறான நிலையில் நான் தோற்கடிக்கப்பட்டால் தேசியப் பட்டியலில் வருவேனென்றும் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் நான் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டால் கடைசி வரைக்கும் தேசியப்பட்டியல் ஊடாக வரவே மாட்டேன். இது இந்த முறை நான் சொல்கிற விசயம் மட்டுமல்ல. சென்ற தடவை முதன் முதலாக நான் தேர்தலில் போட்டியிட்ட போதும் தேர்தலுக்கு நிறைய நாட்களுக்கு முன்பாகவே நான் பகிரங்கமாக இதனையே அறிவித்திருந்தேன்.
அதாவது நான் இந்தத் தடைவ முதன் முதலாக போட்டியிடுகிறேன். ஆகவே மக்கள் என்னை தெரீவு செய்யாவிட்டால் உடனடியாகவே அரசியலில் இருந்த விலகுவேன் என்று சொல்லி தான் போட்டியிட்டிருந்தேன். இந்தத் தடவையும் அதே நிலைப்பாடு தான்.
அதாவது மக்கள் என்னை தெரீவு செய்யாவிட்டால் நான் அரசியலில் இருந்து ஒதுங்குவேன். அது இன்னொரு கட்சியினுடாகவும் அரசியலுக்கு வர மாட்டேன். தேசியப்பட்டியலூடகவும் வடமாரட்டேன் வேறெந்த தேசிய கட்சிகளூடாகவும் வர மாட்டேன். மக்கள் நிராகரித்தால் அது மக்கள் தீர்ப்பாக ஏற்று நான் விலகுவேன் என்றார்.
Post a Comment