தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்கள் யாழ் ஆயரை இன்று சந்தித்து தேர்தல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தலைமையிலான வேட்பாளர்கள் யாழ் ஆயர் இல்லம் சென்று ஆயரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன் போது சமகால தேர்தல் நிலைமைகள் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தேவைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment