தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக்கான அலுவலகம் யாழ்.சாவகச்சேரி நகரில் பருத்தித்துறை வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா அலுவலகத்தினை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் சசிகலா ரவிராஜ், சாவகச்சேரி நகராட்சி மன்ற தவிசாளர் சிவமங்கை இராமநாதன், உப தவிசாளர் அ.பாலமயூரன், கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Post a Comment