இளையோருக்கு வேலை வாய்ப்பை வழங்க வேலை வங்கி ஒன்றை உருவாக்குவேன் - மணிவண்ணண் - Yarl Voice இளையோருக்கு வேலை வாய்ப்பை வழங்க வேலை வங்கி ஒன்றை உருவாக்குவேன் - மணிவண்ணண் - Yarl Voice

இளையோருக்கு வேலை வாய்ப்பை வழங்க வேலை வங்கி ஒன்றை உருவாக்குவேன் - மணிவண்ணண்



இளையோருக்கான வேலை வாய்ப்பு பிரச்சனைகளை இல்லாது ஒழிக்கும் முகமாக நாம் தேர்தலில் வெற்றி பெற்றதும், உடனடியாக வேலை வங்கி (job bank) ஒன்றினை உருவாக்குவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளருமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

அச்சுவேலி பகுதியில் உள்ள தொழிற்பேட்டைக்கு நேரில் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வேலைவாய்ப்பு தொடர்பில் எமது இளைஞர் யுவதிகள் மத்தியில் பெருத்த அங்கலாய்ப்பு உள்ள இன்றைய காலகட்டத்தில் எமது கட்சியானது தனியார் துறையை விருத்தி செய்து தொழிற்சாலைகளை நிறுவி வேலை வாய்ப்புகளை பெற்றுகொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றது.

எமது அமைப்பின் கனவு நிறைவேற்றப்படுவது மிக இலகுவானது என்பதை புரிந்துகொண்டேன். நாம் வென்றதும் வேலை வங்கி (job bank) ஒன்று உடனடியாக உருவாக்கப்படும். என தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post