கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை என சம்மந்தன் கூறியமை அரசியல் சாணக்கியம் - ஐனநாயகப் போராளிகள் கட்சி தெரிவிப்பு - Yarl Voice கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை என சம்மந்தன் கூறியமை அரசியல் சாணக்கியம் - ஐனநாயகப் போராளிகள் கட்சி தெரிவிப்பு - Yarl Voice

கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை என சம்மந்தன் கூறியமை அரசியல் சாணக்கியம் - ஐனநாயகப் போராளிகள் கட்சி தெரிவிப்பு


ஐனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். இது விடயம் சம்மந்தமாக அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

விடுதலைப்புலிகள் அமைப்பினால் தான் தமிழ் தேசியகூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பது குழந்தைப் பிள்ளைகளுக்கும் தெரியும். சம்பந்தன்ஐயா தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு வேறுபட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இச்சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பை விடுதலைப்புலிகள்தான் உருவாக்கினார்கள் அவர்களின் பிரதிநிதிகள்தான் கூட்டமைப்பு செயற்படுகின்றது என அவர் பகிரங்கமாக தெரிவித்துவிட்டு சர்வதேசத்துடனோ அல்லது உள்நாட்டிலோ சம்பந்தன் ஜயா பேச்சுவார்த்தையில் ஈடுபடமுடியுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

அரசியல் சாணக்கியம் சம்பந்தமாக சம்பந்தன் ஜயா கூறிய கருத்துக்களை நாம் மறந்து விட வேண்டும். சம்மந்தன் ஐயாவிற்கு புலிகள்தான் கூட்டமைப்பை உருவாக்கினார்கள் என்கின்ற செய்தியை சொல்லித்திரிகின்ற வேலை வழங்கப்படவில்லை ஆண்டாண்டு காலமாக தமிழினம் பெறப்பட வேண்டிய அரசியல் உரித்துரிமையினை பெற்றுத்தரும் ஜனநாயக உரித்துரியமை திமிரோடு பெற்றுத்தரும் பெரும் வேலைத்திட்டமே வழங்கப்பட்டது

தற்போது நமது மக்களுக்கு நிறைய செய்யவேண்டியுள்ளது.யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த மகிந்த கோத்தபாய அரசே தற்போது  ஆட்சியில் உள்ளது இவர்கள் ஊடாக நாம் தீர்வினைப்பெற்றுக்கொள்ள 18தொடக்கம் 20பிரதிநிதிகளை கூட்டமைப்பிலிருந்து பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.

தமிழ்தேசியகூட்டமைப்புக்கு எதிராக செயற்படுவோருக்கு நாம் ஒன்றை தெரிவித்துக்கொள்கின்றோம் இறுதியுத்தம் மரணிக்கும் வரை  விடுதலைப் புலிகளின் தலைவரோ அமைப்போ கூட்டமைப்பை கலைத்துவிட்டோம் என்றோ அல்லது வாக்களிக்கவேண்டாம் என்றோ எச்சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என்பதை கூறிக்கொள்கின்றோம்.

தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை திருமலையில் பாதுகாக்கவேண்டியே ரூபன் அண்ணரை தலைவர் திருமலைக்கு அனுப்பிவைத்தார். இன்றுதலைவரின் கட்டளைக்கு எதிராக ரூபன் அண்ணன் செயற்படுகின்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post