என்ன பேசுகிறோம் என்று தெரியாது எதையாவது பேசுவோம் என்று பேசுகின்ற சரவணவபன் போன்றவர்கள் தெரிவிக்கின்ற கருத்துக்களில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேடை கிடைக்கிறது என்றதற்காக எதையாவது பேசிவிட்டு போகலாம் என்று சரவணபவன் போன்றவர்கள் கருதக் கூடாது என்றார்.
யுhழ் ஊடக அமையத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். இச் சந்திப்பின் போது கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் இத் தேர்தலில் பல கட்சிகளும் பிரிந்து நிற்பதால் யாழில் ஏழு ஆசனங்களும் தங்களுக்கு கிடைக்கலாமென்ற அடிப்படையி; கருத்தொன்றை முன்வைத்திருப்பதாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே சரவணபவன் தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டக்களை சுரேஸ் முன்வைத்தார். அங்கு அவர் தெரிவித்தாவது..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலத்திச் சென்றவர்கள் அனைவரையும் இணைத்து நாங்கள் ஒரு கூட்டணியை உருவாக்கியிருக்கின்றொம். இரண்டாவது அவரது தமிழரசுக் கட்சிக்குள் தான் இப்பொழுது உடைவுகளும் பிளவுகளும் நிறைந்திருப்பது அவரது தமிழரசுக் கட்சிக்குள் தான். இங்கு ரு விடயத்தை நீங்கள் பார்த்தீர்களானால் சுமந்திரனை எதிர்த்து தனது பத்திரிகையில் நிறையவே எழுதிக் கொண்டிருக்கின்றார். ஆதைப் பற்றிக் கேட்டால் அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறுவார். ஆனால் அவரது பத்திரிகை அதைத் தான் செய்யும்.
இப்பொழுது சிறிதரனை பார்த்தால் சிறிதருனும் சுமந்திரனும் வெளிப்படையாக இப்பொழுது கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள். அதில் சிறிதரன் மிக வெளிப்படையாக சில விடயங்களைச் சொல்லுகின்றார். குறிப்பாக அன்ரன் பாலசிங்கம் போல எங்களுக்கு ஒரு அறிவாளி கிடைத்திருக்கின்றார். இந்த அறிவாளி போல யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம் என்று கேட்கின்றார்.
துமிழ்ச் சமூகத்திற்குள் சுமந்திரளைத் தவிர யாரையாவது காட்டங்கள் என்று அவர் கேட்பதென்பது என்னைப் பொறுத்தவரையில் அவர் தன்னையும் அறிவாளியாக கருதவில்லை. அவரது பேச்சில் இருந்த அவர் அறிவாளி அல்ல என்பதும் விளங்குகின்றது. ஆகவே அவர் கேட்கிற விடயம் என்னவென்றால் சுமந்திரனைப் போல ஒரு அறிவாளி எங்களுக்கு வேண்டும்.
அவருக்கு வாக்களிக்க சொல்லி கேட்பதால் நான் தோற்கடிக்கப்படால் அந்த வரலாற்று தோல்வியை நான் ஏற்றுக் கொள்வென் என்று கூறுகின்றார். ஆக சுமந்திரனுக்கு வாக்களிக்க சொல்லி கேட்டால் தான் தோற்கடிக்கப்படலாம் என்பதும் அவருக்கு விளங்குகின்றது. அது என்ன வரலாற்றுத் தோல்வி என்று எனக்கும் விளங்கவில்லை. ஆக தனது தோல்வியை வரலாற்று தோல்வியாக அவர் நினைக்கின்றார் போலும்.
ஆக பிரச்சனை எங்க இரக்கின்றது என்றால் அது தமிழரசுக் கட்சிக்குள் தான். தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்குள் தான். இன்றைக்கு வரையில் ஒழுங்கு முறையான ஒரு பொதுக் கூட்டத்தை இவர்களால் கூட்ட முடிந்ததா.
இதுவரையில் நாங்கள் பத்துக் கூட்டங்களுக்கு மேல் பல்வேறுபட்ட இடங்களில் நடாத்தியிருக்கின்றோம். ஏங்களுடைய எல்லா வேட்பாளர்களும் அதில் கலந்து கொள்கின்றனர். ஆனால் தமிழரசுக் கட்சியால் ஒரு பொதுக் குழுக் கூட்டத்தையேனும் போட முடியவில்லை என்பது தான் யதார்த்தமான உண்மை.
ஆகவே சரவனபவனுக்கு ஊடக அமையம் போன்ற இடத்தில் மைக்கோ அல்லது மேடையோ கிடைத்தால் தான் வந்து விரும்பின மாதிரி பேசிவிட்டு போகலாம் என்று கருத முடியாது. அவர் தன்னை ஒரு ஊடகப் போராளி எனக் காட்டிக் கொள்கிறார். ஆனால் அவருடைய ஊடக நிறுவனத்தைச் சார்ந்தவர்களை அவ்வாறு செயற்பட விடுவதில்லை.
ஆக அவருடைய கருத்துக்கள் செயல்கள் எல்லாம் வந்து முட்டி மோதி முரண்பட்டு என்ன பேசுவது என்றெல்லாம் தெரியாது வந்து இருந்து எதையாவது பேசுவம் என்ற நிலை தான் இருக்கிறது. ஆகவே அவர் பேசுவதில் எந்தவித உண்மையுமில்லை என்றார்.
Post a Comment