தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. முதலில் சென்னையில் மட்டும் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோன பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு உறுதியான மாவட்டங்கள் பின்வருமாறு:-
ழூ வேலூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4225 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் வேலூர் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ழூ விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மேலும் 133 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2345 ஆக உயர்ந்துள்ளது.
ழூ புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 62 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1078ஆக உயர்ந்துள்ளது.
ழூ தேனி மாவட்டத்தில் இன்று மேலும் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 2620 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரை 1118 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதைதொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று ஒரே நாளில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Post a Comment