அமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை முற்று முழுதாக நிராகரிக்கின்றோம். வரலாறை அறிந்தவர்கள் யாராக இருந்தாலும் அப்படி அமைச்சுப் பதவிகளுக்காக பேரம் பேசப் போவதான பேச்சுக்களை பேசியிருக்க முடியாது என்பது மட்டுமல்ல பேசவும் முடியாது.
இவ்வாறு தெரிவித்துள்ள முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான பா.கஐதீபன் இந்த நாட்டில் இன முரண்பாட்டிற்கு தீர:வு காணப்பட வேண்டுமென்ற தரப்பாக நாங்கள் இருக்கின்ற பொழுது அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்வதென்ற பேச்சிற்கே இடமில்லை என்றார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். அதன் போது கூட்டமைப்பின் பே;சாளர் அண்மையில் தெரிவித்திருந்த அமைச்சுப் பதவிகளைப் பெறுவது குறித்தான விடயம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை பெறுவது குறித்தான அந்தச் செய்திகளை கேட்டுள்ளேன். ஆயினும் அதில் ஒரு மயக்கம் இருக்கிறது. ஏனெனில் அவ்வாறு அமைச்சுப் பதவிகளை எடுப்பதாக அவர் சொல்லியிருப்பாரா என்றதில் ஒரு சந்தேகம் இருக்கிறது.
ஏனென்றால் தமிழரசுக் கட்சியினதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் வரலாற்றையும் அதற்குப் பிறகு கூட்டமைப்பின் வரலாறையும் அறிந்தவர்கள் யாராக இருந்தாலும் அப்படி ஒரு பேச்சை பேசியிருக்க முடியாது. பேசுவம் கூடாது.
ஏனென்றால் எங்களைப் பொறுத்தவரையில் அது தமிழரசுக் கட்சியின் சரித்திரமாக இருந்தாலும் அது 1965 களில் மு.திருச்செல்வம் அவர்கள் டட்லி செல்வா ஒப்பந்தங்களிளே அதுவும் அவர் அதில் ஒரு செனட்டராக இருந்தவர். மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டவராகவும் இருக்கவில்லை. அப்படியான ஒருவரைத் தான் தந்தை செல்வா அன்றைக்கு உள்ளுராட்சி அமைச்சராக அவரை பதவியேற்கச் செய்தார்.
ஆனாலும் அதற்குப் பிறகும் அந்தச் செயற்பாடுகளில் திருப்தியில்லாத காரணத்தினால் அதில் இருந்து 1968 ஆம் ஆண்டுகளில் இராஐpனாமாச் செய்தார். ஆன காரணத்தினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அது தமிழரசுக் கட்சி வரலாற்றிலும் சரி தமிழர் விடுதலைக் கூட்டணியின் வரலாற்றிலும் சரி கூட்டமைப்பின் வரலாற்றிலும் சரி அமைச்சுப் பதவிகளை எடுத்து வேலை செய்யதாக இல்லை.
அமைச்சுப் பதவிகளை எடுப்பது மிக கஸ்ரமான ஒரு விடயம். ஏனென்றால் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை எடுத்துவிட்டால் அந்த அரசாங்கத்தின் ஒரு தரப்பாகவே அந்தத் தரப்பு மாறி விடும். ஆன காரணத்தினால் பிறகு அரசாங்கம் செய்கின்ற அத்தனை விடயங்களுக்கும் ஒரு கூட்டுப் பொறுப்பாக பதில் சொல்லுகின்ற கடமை இருக்கக் கூடிய நிலைமை இருக்கிறது.
ஆன காரணத்தினால் எங்களுக்கான பிரச்சனை வேறு. இந்த நாட்டில் இன ரீதியான ஒரு முரண்பாட்டிற்கு தீர்வு காணப்பட வேண்டுமென்ற தரப்பாக நாங்கள் இருக்கின்ற பொழுது அமைச்சுப் பதவி வேண்டுமென்றோ அல்லது அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வது என்ற பேச்சிற்கே இடமிருப்பதாக என்னைப் பொறுத்தவரையில் கருதவில்லை.
ஏனென்றால் எங்களுடைய மக்கள் காலங்காலமாக எதற்காக ஆதரவை வழங்கி வருகின்றார்கள் என்று பார்க்க வேண்டும். குறிப்பாக சில கூட்டங்களில் நாங்கள் கலந்து கொள்கின்ற போது ஏன் அமைச்சுப் பதவியை எடுத்து நீங்கள் வேலை செய்யக் கூடாது என்று எங்களிடம் மக்கள் கேட்கின்ற போது அதற்கு எங்களுடைய பதில் மிகத் தெளிவானதாக இருக்கின்றது.
எங்களுக்கு மக்கள் கடந்த காலங்களில் அளித்து வந்திருக்கின்ற ஆதரவு என்பது அமைச்சுப் பதவிகளை எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக அல்ல. எங்களுடைய பிரச்சனை தொடர்பாக ஒரு தீர்விற்கான செயற்பாடுகளில் ஈடுபடுங்கள் என்ற மக்களுடைய ஆணையாக கோரிக்கையாக எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
ஆன காரணத்தினால் இப்படியாக கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளுக்காகப் பேரம் பேசப் போகிறது என்று சொல்லப்படுகிற குற்றச்சாட்டுக்களை கருத்துக்களை நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment