விக்கிக்கும் கயேந்திரகுமாருக்கும் பொது வெளியில் வந்து பேச பயம் - சுமந்திரன் விடுத்துள்ள சவால் - Yarl Voice விக்கிக்கும் கயேந்திரகுமாருக்கும் பொது வெளியில் வந்து பேச பயம் - சுமந்திரன் விடுத்துள்ள சவால் - Yarl Voice

விக்கிக்கும் கயேந்திரகுமாருக்கும் பொது வெளியில் வந்து பேச பயம் - சுமந்திரன் விடுத்துள்ள சவால்

எங்களுடைய முதுகிற்குப் பின்னால் நின்றுகொண்டு பொய்யான பிரச்சாரங்களையும் குழப்புகிற வேலையை மட்டும் தான் விக்கினேஸ்வரன் மற்றும் கNஐந்திரகுமார் போன்றவர்கள் மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏஇசுமந்திரன் பொது வெளியில் வந்து பேசம் இவர்களுக்குப் பயம் என்றும் முடிந்தால் வந்து பேசலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி தர்மபுரத்தில் இன்று இடம்பெற்ற கூட்;டமைப்பின் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

ஊடக நிறுறவனமொன்று விவாத நிகழ்ச்சியொன்றை யாழ் வீரசிங்;கம் மண்டபத்தில் நடாத்த இருந்ததது. அந்த நிகழ்வு குறித்து அதன் ஏற்பாட்டாளர்கள் ஆரம்பத்தில் எங்களுடன் பேசியிருந்தார்கள். அதாவது உங்களுடைய கட்சியில் இருந்து இரண்டு பேரும் அதே போல விக்கினேஸ்வரன் ஐயா மற்றும் கNஐந்திரகுமாரின் கட்சியில் இருந்து இரண்டு பேரையும் எனக் கேட்டிருந்தார்கள். அதற்கு மற்றக் கட்சித் தலைவர்கள் வருவார்களாக இருந்தால் நானும் வருவேன் என்று நான் கூறியிருந்தேன். 

ஆயினும் பலரும் வராததாலும் ஒதுங்கியதாலும் அந்தக விவாத நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றது. அதற்கான காரணம் என்னவெனில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்; தலைவர் விக்கினேஸ்வரன் ஐயா அவர்கள்  தமது கட்சியின் சார்பில் சுரேஸ பிரேமச்சந்திரன் மற்றும் அருந்தவபாலன் ஆகியோர் இதில் பங்குபற்றும் படியாக நியமித்திருந்தாராம.; ஆனாலும் அவர்களும் நிகழ்விற்கு வராமல் கடைசி நேரத்தில் பின்னடித்து விட்டார்கள். 

அதே நேரம் கNஐந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இந்த விவாத நிகழ்விற்கு சுமந்திரன் வந்தால் தான் வருவதாக திரும்ப திரும்ப நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கூறியிருக்கிறன்றாராம். அதே போல நானும் கNஐந்திரகுமார்; வந்தால் வருவதாக கூறியிருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் கNஐந்திரகுமாரும் இந்த விவாத நிகழ்விற்கு; வரவில்லை என அறிவித்திருக்கின்றார். அதே நேரம் தனக்குப் பதிலாக தன்னுடைய கட்சியின் சார்பில் காண்டிபன் என்கின்ற ஒருவரையும் சுகாஷ் என்கின்ற ஒருவரையும் செல்லுமாறு பணித்திருக்கிறார். 

இந்த விடயத்தை நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் நேற்றிரவு என்னிடத்தே சொன்ன போது நானும் அந்த நிகழ்விற்கு செல்லாமல் எங்களுடைய கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை குறித்த நிகழ்விற்கு செல்லும்படியாக நான் நியமித்திருந்தேன். இவ்வாறான நிலைமைகளின் மத்தியில் தற்போது அந்த நிகழ்ச்சியையே ஏற்பாட்டாளர்கள் இரத்துச் செய்துள்ளனர்.

ஆக ஒரு பொது மேடையில் வந்து பேசுவதற்கு தலைவர்களுக்கு வக்கில்லை. விக்கினேஸ்வரன் ஐயாவிற்கு வந்து நின்று பேசுவதற்கு கேட்டால் கேள்விக்கு பதில் சொல்ல அவருக்கு தெரியாது. ஏனெ;றால் எந்தக் கேள்வி கேட்கப்படும் என்று முதலே தெரிந்தால் தானே வாசிப்பதற்கு எழுதிக் கொண்டு வரலாம். 

அதைவிடுத்து அதில் வைத்து கேள்வி கேட்டால் அவர் எப்படி பதில் சொல்லுவார். ஆக அவர் முதலே எழுதி ரைப் பண்ணி வாசிக்க வேண்டும். ஆகையினால் அவர் எப்படிக் கேள்விக்கு பதில் சொல்வது. குறிப்பாக கேள்வி பதில் என்று பத்திரிகையில் வருவதில் கேள்வியும் அவரே பதிலும் அவர் தான். 

மற்றவருக்கு தான் வரப் பயம். என்ன பயம். முடிந்தால் வந்து பொது வெளியில் பேசலாம். இதனைவிடுத்து எங்களுடைய முதுகிற்கு பின்னால் நின்று கொண்டு பொய்யான பிரச்சாரங்களையும் குழப்புகிற வேலையை மட்டும் செய்து கொண்டு அவர்கள் ஒரு பக்கத்தில் பயணிக்கிறார்கள். 

மறுபக்கத்தில் அவர்களும் தங்களை தீவிர தமிழ்த் தேசிய வாதிகளைப் போல காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் செய்யிறது முழுக்க குழப்ப வேலை. மறுபக்கத்தில் அரசாங்கத்தோடு ஒட்டிக் கொண்டிருந்து முற்று முழுதாக எங்களுடைய இருப்பை நாசமாக்கிற எல்லா வேலையையும் செய்து கொண்டு; கூட்டத்தில்  பாடுவது தமிழீழ எழுச்சிப் பாடல் தான். அங்கஐன் இராமநாதனின் கூட்டத்தில் இந்த எழுச்சிப்பாடல் தான் போடப்படுகிறது. 

மேலும் இங்கு கிளிநொச்சியலும் ஒருவர் இருக்கிறார.; இப்போது சுயேட்சையாகைக் கேட்கிறாராம். ஏன்ன சுயேட்சை. அவர் எங்கே இருந்தவர் என்ன செய்தவர். எப்படியாக எங்களுடைய தேசிய சிந்தனையை சிதைப்பத்காக ஒரு ஒட்டுண்ணியாக இருந்தவர் என்பது எல்லாருக்கும் தெரியும் தானே. 

டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக எத்தனை காலம் இருந்திருப்பார். ஆனால் அவர் எனக்கு அரசியல் பலம் போதாது என்றும் இருந்தால் நான் செய்திருப்பேன் என்றும் சொல்கிறார். அப்படியானால் போதாத பலத்தை வைத்துக் கொண்டு என்னத்தைச் செய்தார் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

கொள்ளையடித்தார். காணாமலாக்கப்பட்டவர்களுக்கான ஐனாதிபதி ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் சென்று சாட்சிகளைப் பெற்ற போது சாட்சியளித்த பெற்றோர்கள் ஈபிடிபி தான் எங்களுடைய பிள்ளைகைளை கடத்திக் கொண்டு போனது என்று கூறியவை எல்லாம் மறு நாள் பத்திரிகைகளிலும் வந்துள்ளது. அந்த விடயங்கள் அந்தக் குழுவின் அறிக்கையிலும் முழுமையாக இருக்கிறது. 

இவர்கள் எல்லாம் தான் வந்து இன்றைக்கு எ;ங்கள் மக்களிடத்தே வாக்கு கேட்கின்றார்கள். இரண்டு அணிகள் ஒரு அந்தத்திலும் மற்ற அணிகள் வேறு அந்தத்தில் இருப்பதாகக் காட்டிக் கொண்டு இரண்டு பேருமே முற்று முழதாக எங்களுடைய பயணத்தை சிதைக்கிற வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே எங்களுடைய பணத்திற்கு இதுவரை வழங்கி வந்த ஆதரவை தொடர்ந்தும் மக்கள் வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

 

0/Post a Comment/Comments

Previous Post Next Post