அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை(24) இரவு இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது
அம்பாறை மாவட்டத்தில் முற்றும் முழுதாக பறிபோவதற்கான நிலைமை இருக்கின்றது .அப்படியான சூழ்நிலையில்தான்இம் மாவட்டத்தில் இந்த தேர்தலை ஏதிர்நோக்கி இருக்கின்றோம். இந்த தேர்தலின் பிற்பாடு தமிழ் மக்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் எங்கள் அமைப்பை தவிர வேறு எந்த அமைப்பிற்கும் வாக்களித்தாலும் இது தமிழர் தாயக நிலப்பரப்பல்ல சிங்கள பௌத்த மக்களுக்குதான் சொந்தம் என காட்டப்படுவதுடன் தமது உரிமைகளை தாங்களாகவே கைவிடும் நிலைக்கு வந்துவிடுவோம்.எனவே இதனை எமது தார்மீக கடமையாக விளங்கி கொண்டு சைக்கிள் சின்னத்திற்கு வாக்களித்து 75வருடங்களாக பாதுகாத்து வரும் உரிமைகளை உயிரோடு வைத்திருக்க எம்மை ஆதரிக்க வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் என்னை விவாதத்திற்கு அழைத்து போது நான் அதற்கு பதிலாக சொல்ல வேண்டிய ஒரு விடயம் என்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் வெளியிட்ட ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.அதாவது அதில் சுமந்திரனின் கருத்தை யாரும் கணக்கெடுக்க தேவையில்லை என்பது தான்.எனவே சுமந்திரனை எவருமே கணக்கெடுக்க தேவையில்லை என கட்சியின் தலைவரே குறிப்பிடும் போது நான் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை எனது நேரத்தை வீணாக்கவும் விரும்பவில்லை என்றே கூறுவேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரால் அக் கட்சியின் ஊடக பேச்சாளரை கணக்கெடுக்க தேவையில்லை என்றால் இந்த கட்சி மக்களுக்கு உரிமை சார் விடையங்களுக்காக போராட போகின்றது என்பதனை நீங்களே விளங்க கொள்ள வேண்டும். சுமந்திரன் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோல்வியடையும் நிலையில் இருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் ஏதோ ஒரு அங்கீகாரத்தை அவர் பெற துடிக்கின்றார்.நான் சுமந்திரனுடன் பல தடவைகள் விவாதித்து அவரின் பொய்களை அம்பலப்படுத்தி முக குப்புற படுக்க வேண்டிய நிலைக்கு எத்தனையோ இடங்களில் அவர் தள்ளப்பட்டிருக்கின்றார்.
நான் ஒரு கட்சியின் தலைவர் என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனோடும் தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனோடும் விவாதிக்க தயார் இதுதான் கட்சியின் நிலைப்பாடு . நான் சுமந்தினோடு விவாதித்து விட்டு சென்றால் சுகமாக சுமந்திரனின் தனிப்பட்ட கருத்து என்று தப்பிவிடுவார் . இரா சம்பந்தன் விக்னேஸ்வரன் ஆகியோர் விவாதிக்க தயார் என்றால் மணிக்கணக்கில் நான் அவர்களை அம்பலப்படுத்த தயாராக உள்ளேன்.
கலாநிதி குருபரன் சிறந்த கல்விமான் அவர் யாழ் பல்கலைக்கழகத்திற்கு திடீரென இராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கின்றார் . கல்விமானாக யாழ் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து அதே சமயம் சட்டத்தரணியாவும் செயற்பட்டிருந்தார் இவர் ஏற்கனவே இரந்தவாறு இவ்வாறு தொடரமுடியாது என்ற அறிவித்தலின் பிரகாரம் இராஜினாமா செய்தார் இது ஒரு பிழையான விடையம் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.குருபரனின் பங்களிப்பு கல்விக்கானது மட்டுமாக இருக்க கூடாது முழு சமூகத்திற்கு அத்தியாயம் என்பதற்காக இராஜினாமா செய்தார்.கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி செய்யும் இந்த காலகட்டத்தில் தமிழர்களின் உரிமைகளுக்காக நீதிமன்றங்களுக்கு சென்று வாதாட வேண்டிய கட்டாயத்தை விளங்கி கொண்டு மக்களுக்கு சமூகத்திற்கும்இஇனத்திற்கும் அவருடைய பங்களிப்பை செய்ய வேண்டும் என்பதற்காக முடிவினை எடுத்திருக்கிறார். இதனால் யாழ் பல்கலைக்கழக கல்வி துறை மிக பாரதூரமான பாதிப்பை அனுபவிக்க போகின்றது அந்த வெற்றிடத்தை நிரப்ப மிக பாரிய சவால் உள்ளது என்னை பொறுத்தளவில் குருபரன் எடுத்த முடிவு சரி என்றார்.
Post a Comment