நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்ற துண்டுப்பிரசுரம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று புதன்கிழமை விநியோகிக்கப்பட்டுள்ளது.
பொது அமைப்புக்களின் பேரில் விநியோகிகக்ப்பட்ட இத் துண்டுப் பிரசுரத்தில் கடந்த பல வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் ஏமாற்றியுள்ளதாகவும் நேர்மையாகவும் கொள்கைப் பற்றுடன் செயற்படும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் தலைவர் கNஐந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியே தமிழ் மக்களின் மாற்றுத் தெரிவாக இருக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளளது.
யுhழ்ப்பாணம் உட்பட வடக்கில் செயற்படுகின்ற ஐந்து அமைப்புக்கள் இணைந்து இந்த ஆதரவுக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. இதற்கமைய இன்று யாழில் விநியோகிகக்கப்பட்ட இத் துண்டுப்பிரசுரம் தொடர்ந்து ஏனைய இடங்களிலும் விநியோகிகக்கப்பட உள்ளதாகவும் அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment