வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பில்லாத பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என யாழ் மறைமாவட்ட ஆயர் பிரதமரின் இணைப்பு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத் தினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வண பிதா எஸ்.சந்திரகுமார் இன்று காலை சந்தித்து ஆசி பெற்றார்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் மத விவகாரங்களுக்கான அமைச்சு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கீழ் உள்ள நிலையில் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
குறித்த சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ்மாவட்ட மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்...
மதங்களுக்கிடையே ஒற்றுமையினை வளர்க்கவேண்டும் வடக்கில் மக்கள் படுகின்ற கஷ்டம் துன்பங்களை பிரதமருக்கு தெரியப்படுத்துமாறு கூறியுள்ளேன் வடக்கில் உள்ளமுக்கியமான பிரச்சினையாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க வேண்டும் அத்தோடு கல்வி தொடர்பான விடயங்களிலும் முன்னேற்றம் ஏற்படுத்தவேண்டும்.
அத்தோடு மீன்பிடி விவசாயத்தில் கவனம் செலுத்தி முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் அன்பாககேட்டுக் கொண்டுள்ளேன் இந்த விடயத்தினை பிரதமருக்கு தெரியப்படுத்துமாறு நான் கூறியுள்ளேன் என்றார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மத விவரங்களுக்கான இணைப்பு செயலாளர்......
யாழ் மறைமாவட்ட ஆயர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரியப்படுத்துமாறு என்னிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
அதாவது இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க வேண்டும் கல்வியில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் போன்ற பல்வேறுபட்ட கோரிக்கைகளை என்னிடம் கூறியுள்ளார் அனைத்து விடயங்களையும் நான் பிரதமரிடம் எடுத்துரைப்பேன் என்றார்
Post a Comment