இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நெல்லியடியில் இடம்பெற்றது
இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பெரும் சமூக நலன் சார் வேலைத்திட்டங்களில் ஒன்றாகிய வீடற்ற வறிய குடும்பத்தினருக்கு வீடு நிர்மாணித்து கொடுக்கும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இரண்டிற்கான வீடு நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நெல்லியடியில் இடம்பெற்றது.
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நெல்லியடி மற்றும் பொலிகண்டி பகுதிகளில் கணவனை இழந்து குழந்தைகளுடன் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இரண்டிற்கு வீட்டிற்கான அடிக்கல் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய அவர்களினால் நாட்டிவைக்கப்பட்டது
கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்றும் இன்றையதினம் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது
Post a Comment