ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் தான் நாட்டில் ஜனநாயக சூழல் ஏற்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்
நேற்றையதினம் நெடுந்தீவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகள் அனைத்திலும் ஜனநாயகமற்ற பதற்றமான சூழலில் மக்கள் வாழ்ந்து வந்த நிலை காணப்பட்டது எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் தீவுப்பகுதியில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
தற்போது மக்கள் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி கெடுபிடிகள் இன்றி சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார்கள் தீவுப்பகுதி மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலமே ஜனநாயகமான சூழல் மீளஉருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்
நேற்றைய தினம் நெடுந்தீவு பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட முன்னைநாள் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நெடுந்தீவுபகுதி மக்களை சந்தித்து கலந்துரையாடிய தோடு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
மேலும் கடந்த ஆட்சியின்போது தம்மால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்கள் மற்றும் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்கள் பற்றி ஆராய்ந்ததிருந்தார்.
அப்பகுதி மக்கள் தமது வீதிகள் அனைத்தும் பாவனைக்குதவாத நிலையில் காணப்படுவதனால் அதனை திருத்தி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்
Post a Comment